நான் கடந்து வந்த பாதையில்
எத்தனை சந்தோஷங்கள்
எத்தனை சோகங்கள்
எவ்வளவு சிரிப்பு..
காதலில் ஏற்பட்ட வலியின் தாக்கம் மட்டும் இன்னும் குறையவில்லை
குறை இல்லாமல் வலியின் நீளம் நீண்டுக்கொண்டே செல்கிறது !
பாரதியார் சொன்ன வரிகள் மட்டும் நினைவுக்கு வருகிறது
ஆம் ,
மார்பு துடிக்குதடி ..!
பாவம் அந்த மனிதரும் காதலித்திருப்பார் போல !
முன்பை விட இப்போது வலி என்னவோ குறைந்திருக்கிறது
தூங்க கூட கஷ்ட படுவேன் ..
இரவில் உன் நினைவால்
"தனிமையில் பித்து பிடித்தவன் போல
ஒவ்வொரு நொடியும் செத்துக்கொண்டிருப்பேன்"
அந்த நாட்களை கூட மறக்க நினைக்கிறேன் !
அந்த வலியை பற்றி எழுத்துகளால்
வெளிபடுத்தும் போது கூட வலிக்கிறது ..
தவிக்கும் அநாதை உயிர் போல
சோகத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் ...
மன வலியால் துடித்தேன் !
அவ்வளவு சோகத்திலும் குடியை தவித்தேன்
உனக்கு அது பிடிக்காதே என்று !
என்னையே உனக்கு பிடிக்காமல் போய்-விட்டதே என எண்ணி
எனக்கு ஆறுதலை தேட ஆரம்பித்தேன் !.
இரவில் உறங்க குடியில் மூழ்கினேன் .
நீ சொன்ன வார்த்தைகள் அடிக்கடி என் காதில் விழுந்துக்கொண்டே இருக்கும் ..
உலகத்தில் நீ எங்கு இருந்தாலும் உன்னை தேடி வருவேன் ..
புவி ஈர்ப்பு போல உன் பார்வை !
உன் நிஜத்தின் அழகை எப்படி மறப்பேன் என்று தெரியவில்லை ..
உன்னைதான் தேடி வருகிறது ..
காதலில் நான் ஒரு பைத்தியக்காரன் என்றும் .........
மரணம் வரையிலும் உன் நினைவு என் மனதில் எப்போதும் இருக்கும் என்பதை மட்டும் மறந்தும் மறந்துவிடாதே !!
அன்பே சிவம்
அன்புதான் சிவம்

























ungal kaadhali enge irunthalum intha kavithaiyai padithu kondu iruppal , ungaludaya ninavu kandipai avalukk irukkum :)
ReplyDelete