இப்போது நினைத்தால் கூட
சிரிப்பும் வரும் ..
சிரிப்புடன் அழுகையும் வரும் ...
என் வரிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதை விட
இந்த வீடியோ வை பார்க்கும் போது ஏனோ பழைய நினைவுகளை
ஒவ்வொரு வரிகளும் ... உன்னதமான உண்மை வரிகள் ...
பிரிந்து போன என் நண்பர்களுக்காக
இந்த வீடியோ சமர்ப்பணம் .......
Friends ..
மனசு விட்டு பேசணும் ..
மனசுல இருக்கற கடைசி வார்த்த வரைக்கும் பேசணும்
பிரசவத்துக்கு அப்பறம்..தாயிக்கு வருமே ஒரு நிம்மதி ..
உங்களுக்கும் வரணும் ..
நாம பிரிஞ்சா சந்திக்க அப்பறம் சந்தர்ப்பம் கிடைக்குமா !?
தெரியாது !!
இப்பயே பேசுவோம் இங்கயே பேசுவோம் ..
வருங்காலத்துக்கு வரவேற்பு கூட்டமாவும் இருக்கலாம் ..
நாம சிரிக்க .. அழ .. மனசுங்கள புரிஞ்சிக்க .. மன்னிப்பு கேட்க ..
ஒரு கடைசி சந்தர்ப்பம் இது ..
வெட்க படவேண்டாம் அழுதுடுங்க ........
மன்னிப்பு கேட்கனும்னு தோணுதா !
மரியாதை பார்காதிங்க மன்னிப்பு கேட்டுடுங்க ..
தயக்கமா இருக்க ! நானே தொடங்கி வைக்கிறேன் ..
தெரிந்தோ தெரியாமலோ , உங்க கண்ணாடி மனசுல கல் வீசி இருந்தா
நம்ம காலேஜ் சிலபஸ் ல சொல்லி கொடுத்தது கொஞ்சம்
ரொம்ப கொஞ்சம் !
சிலபஸ் க்கு வெளிய கத்துகிட்டதுதான் அதிகம்
ரொம்ப அதிகம் !
காலேஜ்- க்குள்ள நுழையும் போது..
விரும்பனது எல்லாம் அமையும் அதுதான் வாழ்க்கை ன்னு நினைச்சேன்
இப்போது அமைஞ்சத விரும்பு .. அதுதான் வாழ்க்கையினு புரிஞ்சிக்கிட்டேன் ..
காலேஜ் ல சேர்ந்தபோது நம்ப மனது எழுதாத வெல்ல தால் மாறி சுத்தமா இருந்தது !
இப்போ ! காலம் என்ற பேனா ஒவ்வொரு மனசுலயும் எதோ ஒன்னு எழுதி இருக்கு
ஒரு மனசுல கண்ணீர் !
ஒரு சில மனசுல அவமானம் !!
கனவுகளுக்கு பின்னால போறத விட
காலத்தின் பின்னால போனதுதான் எதார்த்தம் ..
வெற்றி !
வெற்றி மட்டுமே வாழ்க்கையா இருந்தா !
சின்ன சின்ன தோல்வி வேண்டும் !!
தோல்விய ரசிக்க முடியலனா கூட
மதிக்கணும் !
என்னைக்காவது ஒரு நாள்
கடவுள் என் முன்னாடி வந்து என் ஆசை என்னான்னு கேட்டா !?
நான் கேட்பேன் ..
மீண்டும் அந்த College life வேண்டும் .. மீண்டும் அந்த சுகம் வேண்டும் .. அந்த வலி வேண்டும்
செத்து செத்து பொழைக்கற அந்த ஆனந்த அவஸ்தை வேண்டும் !!
அப்பவாது நாம கனவுகள் நினைவாகும் .
கடைசியா கேட்கிறேன் !
தப்பு பண்ணி இருந்த என்ன மன்னிச்சிடுங்க ..
உலகம் ரொம்ப சின்னது !
எங்கையோ எப்படியோ நாம சந்திசித்துதான் ஆகணும் !
அப்போ வார்த்தைகள் ஊமையான இடத்துல ..
கண்ணீர் பேச ஆரம்பிக்கும் ...........
அந்த நாளை நினைப்போம் !
மீண்டும் சந்திக்கற வாய்ப்பு வந்த
தள்ளி நின்னு அழுது பார்ப்போம் ..........
.jpg)



.jpg)
.jpg)
.jpg)


good try man
ReplyDeleteAsian Tamil-Watch Quality New Tamil Movies, Tamil TV Shows, Tamil TV Channals Live Free Online
Tamil Movies Online @ Asiantamil.com
Good one. thanks
ReplyDeleteSwetha Aunty
arumaiyane varigal
ReplyDeletenandri
Priya