பாதை மாறி போன என் பாவையே !
நித்தமும் நீதான் என் நினைவில்
இருக்கிறாய் என்பதை விட !
சத்தமாய் இதய துடிப்பில் கலந்து
இருக்கிறாய் என்பதே பொருந்தும் !
தனிமையில்
உன்னை என் கண்ணீரில் கரைக்க பார்த்தேன்
அப்போதும் கரையவில்லை உன் நினைவுகள் !
உணர்வால் பின்னிபிணைந்த உன் நினைவலைகளை
எழுத்துகளால் வெளிபடுதினேன் கவிதையாக அப்போதும் முற்று பெறாமல் சென்று கொண்டேதான் இருக்கிறது
என் கண்ணீரின் எழுத்துகள் ...........
என் காதல் பிரிவின் வலிக்கு வழியே இல்லையா !
"ஏன் டா இவ்வளவு அன்பா இருக்க !
என்று நீ கேட்டாய் !"
பெண்ணேஅப்போது புரியவில்லை நீ சொல்லும்போது
இப்போதும் எல்லாம் புரிகிறது
மனம் உன் நினைவால் கொழுந்து விட்டு எரிகிறது ......

இதை படிக்கும் போது என் கண்களில் நீர் கசியுது...ஏனோ தெரியவில்லை என் வாழ்விலும் இப்படி ஒரு சம்பவம் நியமாக நடந்தது.....
ReplyDelete