வாழ்க்கை ஒரு முறைதான்
ஒரே ஒரு முறைதான்
அதை ஏன் நீ மற்றவருக்காக வாழ்கிறாய்
மற்றவர்களுக்காக வாழும் நீ
ஏன் பிறந்தாய் !?..
பிடித்தவருக்காக வாழ்கையில் சிலவற்றை விட்டுக்கொடு
ஆனால் வாழ்க்கையையே விட்டு விடாதே ..
காதலித்தவனை கூட கரம் பிடித்து வாழ
தெரியாத உனக்கு ஏன் இந்த வாழ்க்கை -என்பதை
நீயே உன்னை கேட்டு -கொள் ..
அவர்கள் எதாவது சொல்லி விடுவார்களோ
இவர்கள் எதாவது நினைத்து விடுவார்களோ
என்று மற்றவர்களுக்காகவே உன் வாழ்கையை

வீணடித்து விடுகிறாய் ..
உன் மனதை கேட்டு -பார்
நீ யாருக்காக வாழ்கிறாய் என்று
இனியாவது உன்னை மாற்றிகொள்
உனக்காக வாழ் ..
வாழ்க்கை வாழ்வதற்கே !!
-Gopikannan



No comments:
Post a Comment